பேரவையிலேயே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் கண்டனம்
பேரவையிலேயே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் கண்டனம்

பேரவையில் இன்று: மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்; நாள் முழுவதும் ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை அவை கூடியதும், சட்டப்பேரவை உறுப்பினர் மறைந்த திருமகன் ஈவேரா, கால்பந்து நட்சத்திரம் பீலே உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. திருமகன் ஈவேரா மறைவுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது. 

மேலும், முன்னாள் அமைச்சா் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசனகா்த்தா ஆரூா் தாஸ், தமிழறிஞா் ஒளவை நடராஜன், பிரபல ஓவியா் மனோகா் தேவதாஸ், சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் டி.மஸ்தான், கால்பந்தாட்ட வீரா் பீலே ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2023ஆம் ஆண்டிற்கான கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது.

சட்டப் பேரவை கூட்டத் தொடா் வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா். பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க அலுவல் ஆய்வு குழுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.  அதன்பிறகு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் 13ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது.

செவ்வாயன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை 10 மணிக்கு பேரவை மீண்டும் கூடும் போது, கேள்வி நேரம் நடைபெறும். அதன்பின், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். தீா்மானத்தின் மீதான விவாதம் வியாழக்கிழமையும் தொடரும். விவாதங்களுக்கு பதிலளித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமையன்று பேசுவாா் என அவைத் தலைவா் மு.அப்பாவு கூறியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com