சென்னையில் துணிவு திரைப்படக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் அஜித் குமாரின் ரசிகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படமும், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் இன்று அதிகாலை வெளியானது. துணிவு படத்தின் சிறப்புக் காட்சிகள் நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு படத்தின் சிறப்புக் காட்சிகள் அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்அவுட், பேனர்களுக்கு பால் ஊற்றக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட போதிலும், வழக்கம் போல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், சென்னை ரோகினி திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி மீது ஏறி நடனமாடியுள்ளனர்.
இதில், அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்ததில் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், ரோகினி திரையரங்குகளில் உள்ள வாரிசு படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டதுடன், ரசிகர்கள் முந்திக் கொண்டு நுழைய முயன்றதால் திரையரங்கின் கண்ணாடி உடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


