வாரிசு - துணிவு: கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!

துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகளை வழங்க தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வாரிசு - துணிவு: கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!

துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகளை வழங்க தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு, அஜித்குமார் நடிப்பில் தயாரான துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (ஜன.11) வெளியாகியுள்ளன.

டிக்கெட் விற்பனையை அதிகரிக்கவும், வசூல் வேகத்தைக் கூட்டவும் சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இந்த காட்சிகள் அதிகாலை 4 மணி முதலே தொடங்கும்.

இந்த நிலையில் அதிகாலை 4, 5 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்றும், சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டது.

துணிவு திரைப்படத்துக்கு நள்ளிரவில் சிறப்பு காட்சி அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்பு காட்சிகளுக்காக ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு குவிந்தனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன.

பொங்கலையொட்டி 16ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் சிறப்பு காட்சிகளை ரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், 13 முதல் 16ஆம் தேதி வரையான நாட்களில் சிறப்பு காட்சிகளுக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்களுக்கான பணம் திரும்ப வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்தநிலையில் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12, 13 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கை ஏற்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com