
வண்டலூர் உயிரியல் பூங்கா
சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா காணும் பொங்கலுக்குத் தயாராகி வருகிறது.
வழக்கமாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும் என்றாலும் வரும் செவ்வாய்க்கிழமை காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனால் அன்றைய தினம் வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. 51 நாள்கள்.. 27 ஆறுகள்.. உலகின் மிகப்பெரிய சொகுசுப் படகு பற்றிய ஆச்சரிய தகவல்கள்
ஜன. 17ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு, அதிகமானோர் வண்டலூர் பூங்காவுக்கு வருவார்கள் என்பதால் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதையும் படிக்க.. துணிவு வெறும் ஆக்ஷன் படம் மட்டும்தானா..? - திரை விமர்சனம்
வண்டலூர் பூங்காவில் 20 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு, அன்றைய தினம் கூட்டத்தை தவிர்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாயன்று 150க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.