
கோப்புப்படம்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. இவர் உடல்நலக் குறைவு காரணமாக, ஜனவரி 4ஆம் தேதி காலமானார். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரியை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நியமித்துள்ளார். அதன்படி, நகராட்சி ஆணையர் சிவக்குமாரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27-ல் இடைத்தேர்தல்!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.