
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 1,108 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட முயற்சிக்கும் மத்திய அரசு: மம்தா சாடல்
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் பாசனத் தேவை குறைந்ததால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 109.51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 108.94 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 76.91 டி.எம்.சியாக உள்ளது.