ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மார்க்சிய.கம்யூனிஸ்ட் கட்சியினர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மார்க்சிய.கம்யூனிஸ்ட் கட்சியினர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழ்நாடு அரசியலில் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு தீவிரமாகியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆளுநர் தெரிவித்த தமிழ்நாடு பெயர் தொடர்பான கருத்து சர்ச்சையானது. அதனையொட்டி எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்தது. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காதது, தமிழ்நாடு பெயர் தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியது, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுவது உள்ளிட்டவற்றைக் கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வலியுறுத்தி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்தப் போராட்டத்தில் சிபிஐஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எ,சின்னதுரை மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com