18 வயதுக்குட்பட்டோருக்கு கருத்தடை சாதனங்கள் விற்கலாமா? எது சரி?

18 வயதுக்குட்பட்டோருக்கு ஆணுறை (காண்டம்) மற்றும் கருத்தடை மருந்துகள் விற்கக் கூடாது என்று கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அண்மையில் தடை விதித்திருந்தது.
18 வயதுக்குட்பட்டோருக்கு கருத்தடை சாதனங்கள் விற்கலாமா? எது சரி?
18 வயதுக்குட்பட்டோருக்கு கருத்தடை சாதனங்கள் விற்கலாமா? எது சரி?

18 வயதுக்குட்பட்டோருக்கு ஆணுறை (காண்டம்) மற்றும் கருத்தடை மருந்துகள் விற்கக் கூடாது என்று கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறை அண்மையில் தடை விதித்திருந்தது.

கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறை பிறப்பித்த இந்த உத்தரவுக்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல கருத்துகள் எழுந்தன. உண்மையில் டீன் ஏஜ் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோருக்குத்தான் இதில் எந்த கருத்தும் இருந்திருக்காது என்று கூறப்படுகிறது.

18 வயதுக்குள்பட்டவர்களுக்கு கருத்தடை மருந்துகள் அல்லது ஆணுறை விற்பனை செய்யப்படாவிட்டால் என்னவாகும் என்பது குறித்த விவாதங்கள் கர்நாடக மாநிலம் முழுவதும் எதிரொலித்தன.

அதாவது, இளம் வயதினருக்கு கருத்தடை மருந்துகளையோ அல்லது காண்டமோ விற்பனை செய்யாமல் போனால், அதனால், கலாசார சீரழிவு குறையும் என்று வாதிட முடியாமல், இதனால், தேவையற்ற கர்ப்பம், பாலியல் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கும் என்றே வாதங்கள் முன்வைக்கப்பட்டன. பல விவாதங்களும் இதையே மீண்டும் மீண்டும் எதிரொலித்தன. 

இதற்கிடையே, மேலும் ஒரு திருப்புமுனையாக, கர்நாடக மருந்து கட்டுப்பாட்டுத் துறையோ, மருந்தாளுநர்கள் மற்றும் மருந்துக் கடைகளுக்கோ, இளம் வயதினருக்கு காண்டம் மற்றும் கருத்தடை தடுப்பு மருந்துகளை நேரடியாக விற்பனை செய்யக் கூடாது என்று தாங்கள் எந்த விதமான அறிவுறுத்தல் கடிதத்தையும் அனுப்பவேயில்லை என்று மறுத்துவிட்டது.

ஆனால், கர்நாடக மருந்து கட்டுப்பாட்டாளர் பகோஜி டி. சொன்னதாக, ஒரு தகவல் ஊடகங்களில் பரவியது. அதாவது, மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பாலியல் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுக்கவும் ஆணுறை மற்றும் கருத்தடை தடுப்பு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இவை இளம் வயதினருக்கோ அல்லது பள்ளிக் சிறார்களுக்கோ கிடையாது என்று தெரிவித்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கைப்பேசி கொண்டு வருகிறார்களா என்று பைகளை சோதித்த ஆசிரியர்கள் அதிர்ந்து போயினர். காரணம், அவர்களது பைகளில் கருத்தடை சாதனம் மற்றும் கருத்தடை மாத்திரைகள், சிகரெட் உள்ளிட்ட பொருள்கள் இருந்ததுதான்.

இதோடு மட்டுமல்லாமல், பல மாணவர்களின் பைகளில் ஏராளமான பணம், போதைப் பொருள்களும் இருந்தது ஒட்டுமொத்த பள்ளியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அண்மைக்காலமாகவே சிறார்களின் பழக்கவழக்கங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மேலோட்டமாகச் சொல்லப்பட்டு வந்தாலும், இவ்வாறு பள்ளி பைகளிலேயே கருத்தடைப் பொருள்களும் சிகரெட்களும் கண்டுபிடிக்கப்பட்டது ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com