
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் விசைப்படையில் சென்று அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கடற்படை சார்பில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம் கடற்படை முகாமில் இருந்து சார் ஆட்சியர் தலைமையில் விசைப்படையில் சென்ற கடற்படையினர், மீன்வளத் துறையினர் மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதையும் படிக்க: நிலச்சரிவு காரணமாக ராகுல் நடைப்பயணம் இன்று மாலை ரத்து!
இதில் நாகப்பட்டினம் கடற்படை முகாம் கமாண்டர், மீன்வளத்துறை இணை இயக்குனர், அக்கரைப்பட்டி மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...