விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் 74 ஆவது குடியரசு நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசு நாள் கொண்டாட்டம்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் 74 ஆவது குடியரசு நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் த.மோகன் தேசியக்கொடியேற்றி வைத்து, திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினர்,தீயணைப்புத் துறையினர், ஊர்க்காவல்படையினர், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அமைதியை பறைசாற்றும் வகையில் புறாக்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வண்ண பலூன்களையும் ஆட்சியர் த. மோகன் பறக்கவிட்டார். 

இதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியர், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். 

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 69 பேருக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்களையும், பல்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய பல்துறை அலுவலர்கள்-ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினர். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் ரூ.1.18 கோடி  கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குடியரசு நாள் விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விழுப்புரம் இரா. லட்சுமணன், விக்கிரவாண்டி நா.புகழேந்தி, மயிலம் ச.சிவக்குமார், விழுப்புரம் சரகக் காவல்துறைத் தலைவர் பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்ரீநாதா, நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com