வேலூரில் கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த ஊசூர் பகுதி அணைகட்டு சாலையில் நூருல்லா என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் உள்ளது. இன்று(திங்கள்கிழமை) காலை 9 மணி அளவில் ஏடிஎம் உடைக்கப்படுவது போன்ற பலத்த சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் விறகு வெட்டும் கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைத்துக் கொண்டிருந்தார்.
பின்னர் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த அரியூர் காவல்துறையினர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடமிருந்து கோடாரியையும் பறிமுதல் செய்தனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர் ஊசூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி (53) என்பதும் அவர் சற்றே மனநலம் சரி இல்லாதவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதில் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.