

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கழிவுப் பஞ்சில் நூல் உற்பத்தி செய்யும் ஓபன் எண்ட் மில்களில் வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.
மின்சாரக் கட்டணம், கழிவுப் பஞ்சு விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் உள்ள ஓபன் எண்ட் மின் நிர்வாகங்கள் புதன்கிழமை முதல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுவதாக மறுசூழற்சி ஜவுளி கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம், பல்லடம், காரணம்பேட்டை, வெள்ளகோவில், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக நாளொன்றுக்கு 1,500 டன் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.