
கோப்புப் படம்
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 14) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறை வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன் வழக்கை ஒத்திவைத்தார். ஆட்கொணர்வு வழக்கில் ஜூலை 14-ல் விசாரணை முடிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
அமைச்சா் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரின் மனைவி மேகலா ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு நடைபெற்றது. கடந்த திங்கள் கிழமை வழக்கு நடைபெற்று ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று வழக்கு நடைபெற்ர நிலையில், இருதரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர். செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார்.
இதேபோன்று அமலாக்கத் துறை தரப்பில் வழக்குரைஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்து நிறைவு செய்தார்.
இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வரும் 14ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...