எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு காமராஜர் வாழ்வு: கமல்ஹாசன்

எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு காமராஜர் வாழ்வு: கமல்ஹாசன்


சென்னை: எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பிரபரலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எண்ணம் சிறந்ததெனில் எல்லாம் சிறக்கும் என்பதன் எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் வாழ்வு. படிப்பறிவும் இல்லாத கிராமத்துச் சிறுவன் ஒரு மாநிலத்துக்கே கல்வியூட்டி, மொத்த நாட்டுக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்ந்த கதையை நாடு மறக்காது; நாமும் மறவோம். பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அது, நாமும் சிறக்க நல்ல வழி காட்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com