விஏஓ வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் திருட்டு!

கும்பகோணம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
விஏஓ வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் திருட்டு
விஏஓ வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் திருட்டு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பாரதி நகரைச் சேர்ந்தவர் எம். முத்துக்குமரன் (38). இவர் கும்பகோணம் வட்டத்துக்குட்பட்ட ஓகை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பினார்.

அப்போது முன் பக்கக் கதவில் இருந்த பூட்டும், பின் பக்கக் கதவும் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, 20 பவுன் நகைகளும் ரூ. ஒரு லட்சம் ரொக்கமும் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து நாச்சியார் கோவில் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com