அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை, விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
Published on
Updated on
2 min read

சென்னை, விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் திங்கள்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்த விவரம்: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குத் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி திடீர் சோதனை செய்தது. இந்நிலையில் சென்னை, விழுப்புரத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 5 இடங்களில் மத்திய அமலாகத்துறையினர் திங்கள்கிழமை காலை திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள  பொன்முடியின் வீட்டுக்கு காலை 7 மணிக்கு சோதனை நடத்துவதற்காக அமலாக்கத்துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினரும் அங்கு வந்திருந்தனர். சோதனைக்கான காரணத்தை கூறி, அதற்கான உத்தரவை காட்டிய அமலாக்கத்துறை அதிகாரிகள், உடனே அங்கு தங்களது வேலையை தொடங்கினர். 

இச்சோதனை குறித்து தகவலறிந்த திமுகவினர் அங்கு திரண்டு வரத் தொடங்கினர். இதனால் அங்கு பாதுகாப்பு கருதி, போலீஸார் குவிக்கப்பட்டனர். இதேபோல விழுப்புரம் திருப்பான் ஆழ்வார் தெருவில் உள்ள வீடு, விக்கிரவாண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் வீட்டின் சாவி இல்லாததினால், அங்கு சோதனையை தொடங்குவதில் சுமார் அரை மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.

விழுப்புரம் கிழக்கு சண்முகப்புரத்தில் உள்ள அமைச்சர் க.பொன் முடி வீட்டின் முன்பு கூடிய திமுக வழக்குரைஞர் அணியினர்.  

சோதனையின்போது சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியும், அவர் மகன் பொன். கெளதம சிகாமணி எம்.பி.யும் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களிடம் அமலாக்கத்துறையினர் வழக்குத் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது. இந்த சோதனை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சோதனைக்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலையும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.

பொறியியில் கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com