மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அமைச்சர் க.பொன்முடி வீடுகளில் சோதனை ஏன்?

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தொடர்புடைய  வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துவதற்கு எதற்காக என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :17 ஜூலை 2023, 4:55 am

உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தொடர்புடைய வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துவதற்கு எதற்காக என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூர்  வட்டம், பூத்துறை கிராமத்தில்  2006 - 2011 வரையிலான காலத்தில் செம்மண் குவாரியில்அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28 கோடியளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, தற்போதைய உயர்கல்வித் து றை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான பொன். கௌதமசிகாமணி, கட்சி நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன்  ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார வழக்குப் பதிந்தனர்.

இந்த வழக்கில் தங்களை விடுவிக்கக் கோரி எம்.பி.பொன்.கெளதமசிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் கடந்த ஒரு மாதம் முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஏதும் நடைபெற்றிருக்கிறதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து வேலூர் நீதிமன்றமும், அதிகாரத்தை பயன்படுத்தி மாமியார் பெயரில் சொத்து வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை அண்மையில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.