பாஜக இதுபோன்று தொடர்ந்து செய்தால் கர்நாடகத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் c மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் சோதனை நடைபெறும் பொன்முடியின் வீட்டிற்குள் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை. இதனை நாங்கள் சட்டரீதியாக அணுகுவோம். நான் வழக்கறிஞர். எதற்காக இந்த சோதனை என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது.
2011ல் ஜெயலலிதாவால் போடப்பட்ட வழக்கு இது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தது. அப்போது நடவடிக்கை எடுக்காமல் இப்போது ஏன் எடுக்கிறார்கள்? அமலாக்கத்துறை வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?
பாட்னாவில் எதிர்க்கட்சிக் கூட்டம் நடக்கும் சூழ்நிலையில் இந்த மாதிரி சோதனை நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளை மிரட்டவே இப்படி செய்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். யார் பிரதமராக வரக்கூடாது என்பதே முக்கியம் என்ற முழக்கத்தை முதல்வர் ஸ்டாலின் முன்வைத்ததில் இருந்தே நெருக்கடி
மத்திய பாஜக அரசின் ஆட்சி முடிவுக்கான கவுன்-டவுன் தொடங்கிவிட்டது. பாஜக இதுபோன்று தொடர்ந்தால், கர்நாடகத்தில் ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



