
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் நெடுவாசல் ஊராட்சியில் வாய்க்கால் தூர் வாரும்பொழுது கருங்கல் பெருமாள் சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
நெடுவாசல் ஊராட்சி செருகடம்பனூர் கிராமத்தில் உள்ள சிங்கமடை வாய்க்கால் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும்பொழுது 5 அடி உயரமுள்ள பழமை வாய்ந்த பெருமாள் கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலையை கிராம மக்கள் கரைக்குக் கொண்டு வந்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.
படிக்க: பாஜக கூட்டணி ஆலோசனை: தமிழகத்திலிருந்து 4 கட்சிகள் பங்கேற்பு!
தகவல் அறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் நேரில் சென்று 5 அடி உயரமுள்ள பழமைவாய்ந்த பெருமாள் கற்சிலையை ஆய்வு செய்து வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர். பொறையார் காவல்துறையினர் மற்றும் வருவாய் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...