
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவேற்றப் பணியை வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்து பெண்களிடம் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்.
திருக்காட்டுப்பள்ளி: தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் பதிவேற்றப் பணி நடைபெறுவதை வியாழக்கிழமை முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதல்வர் திருச்சி, தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சிக்கு புதன்கிழமை காலை வந்தார். திருச்சியில் வியாழக்கிழமை காலை வேளாண் சங்கமம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த முதல்வர், கார் மூலம் தஞ்சாவூர் நோக்கிப் புறப்பட்டார்.
இதையும் படிக்க | அனுபவம்தானே வாழ்க்கை... ரசிகருக்கு அறிவுரை வழங்கிய துல்கர் சல்மான்!
தஞ்சாவூருக்கு வரும் வழியில் செங்கிப்பட்டி அருகே மனையேறிப்பட்டி கிராமத்தில் வந்தபோது, அப்பகுதியிலுள்ள கிராம சேவை மையத்தில் நடைபெறும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவேற்றப் பணி நடைபெறுவதை திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த பெண்களிடம் விண்ணப்பங்கள் கொடுத்துவிட்டீர்களா? எனக் கேட்ட முதல்வர், உங்களுக்கான உரிமைத் தொகை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...