
கோப்புப்படம்
சென்னையில் உள்ள கொரட்டூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவு 1 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் எவ்வளவு பதிவானது என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிக்க: இன்றைய தக்காளி விலை நிலவரம்!
தற்போது, சம்பவ நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...