
பாராசிடமால் உள்பட 127 மருந்துகளின் விலை குறைகிறது; நீரிழிவு மாத்திரை விலை உயர்வு
அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்ட தரம் குறைந்த பாராசிட்டமால் மாருந்துகள் தொடர்பான வழக்கில், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன இயக்குநர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் தரம் குறைந்த மாத்திரைகள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திலிருந்துதான் 2006ஆம் ஆண்டு வாக்கில் தமிழகம் முழுவதம் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், தாம்பரம் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் சரக மருந்துகள் ஆய்வாளர், தரம் கறைந்த பாராசிட்டமால் மருந்து விநியோகம் செய்யப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணை நிறைவுபெற்றதையடுத்து, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இன்று பிறப்பித்த உத்தரவில் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவன இயக்குநர்கள் மகேந்திரா பி ஜெயின் மற்றும் ராஜேஷ் பி ஜெயின் ஆகியோருக்கு தலா ஒராண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...