
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்கவுள்ளது. மேலும், கழிவுகளை அகற்றுவதற்கு ஆகும் செலவை ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழுதான இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருள்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...