தமிழக பாஜக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில்தான் நிதி ஒதுக்கப்பட்டு, அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு தமிழக பாஜக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சிதம்பரத்தில் மறைந்த தலைவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .எஸ். அழகிரி
சிதம்பரத்தில் மறைந்த தலைவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .எஸ். அழகிரி

சிதம்பரம்: கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில்தான் நிதி ஒதுக்கப்பட்டு, அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு தமிழக பாஜக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்படவுள்ளது. மறைந்த முன்னாள் தலைவர் எல்.இளையபெருமாள் சமூக பணியை அறிந்து தமிழக முதல்வர் சிதம்பரத்தில் அவருக்குநினைவு சின்னம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 

எல்.இளையபெருமாள் அகில இந்திய அளவில் தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவராக இருந்து சிறப்பான அறிக்கையை தாக்கல் செய்தவர். ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக பாடுபட்டவர். அவரது நூற்றாண்டு விழாவிற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களை அழைத்து வருவது என முடிவு செய்துள்ளோம். அதற்கான பணியை கடலூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செய்து வருகிறது.

இந்த நூற்றாண்டு மிகப்பெரிய விபத்து ஓடிசா ரயில் விபத்தாகும். 300-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். நவீன தொழில்நுட்பம் நிறைந்த இந்த நூற்றாண்டில் இந்த விபத்திற்கு காரணம் மனித தவறுதான். அதனை கையாண்ட மனிதர்களான அதிகாரிகள், பணியாளர்கள் தவறு செய்துள்ளார்கள். மோசமான நிர்வாகத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குற்றம் நடத்துள்ளது, தவறு நடந்துள்ளது என்பதால், குற்றம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் கூறியுள்ளார். இது இயல்பான விபத்தல், நிர்வாக கோளாறினால் ஏற்பட்ட விபத்து. இதனால் ரயிலில் பயணம் செய்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

காவிரியில் மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழகத்தில் பற்றி எரியும் கருத்தாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை காவிரி என்பது நம் உயிர் மூச்சு. காவிரி நதி தோன்றியதிலிருந்து தமிழகத்திற்கு பலனும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பருவ மழை காலங்களில் 20 லட்சம் கன அடி வரை தமிழக காவிரி டெல்டா கடை மடை பகுதிகளில் வெள்ளப் பெருக்கெடுத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நதி நீர் ஆணையம் 177.25 கன அடி நீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என அறிவித்தது. அதில் குறைவு ஏற்படக்கூடாது. குறைவு ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும். நீரை பெற நமக்கு உரிமை உள்ளது. 

பாஜகவினர் தமிழக காங்கிரஸை விமர்சிக்கிறார்கள். கர்நாடகத்தில் பாஜக அரசு இருந்த போது அன்றைய முதல்வர் பொம்மை மேகதாது அணை கட்ட ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார். அப்போது ஏன் தமிழக பாஜக எதிர்க்கவில்லை. அப்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்தான் எதிர்த்தது. மேலும் 2017 ஆம் மேகதாது அணை கட்ட விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. 

2018 நவம்பர் 22-இல் மேகதாது அணை கட்ட சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது பாஜக அரசு. செய்தது முழுவது பாஜகதான். அதற்கு தமிழக பாஜக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக அரசு அனுமதி மற்றும் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்டக்கூடாது. 

இந்தியாவில் 30 கோடி மக்கள் சிறுபான்மையினர். 25 கோடி மக்கள் தலித்துக்கள். ஆகம விதிப்படி தலித்துகளை இந்துக்களாக பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் 55 கோடி மக்களை புறந்தள்ளியும், மற்ற மத தலைவர்களை அழிக்காமல், சைவ ஆதீனங்களை மட்டும் அழைத்து நரேந்திமோடி நாடாளுமன்றத்தை திறந்துள்ளார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com