
முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டின் தற்போதைய வளர்ச்சி என்ன என்பது ஒருவருக்கு புரியவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
வெளிநாடு செல்வதால் முதலீடுகள் வராது, உள்ளூர் முதலீடுகளை கவர வேண்டும் என குறிப்பிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து ஆளுநர் நேற்று விமர்சித்திருந்த நிலையில், முதல்வர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்துவைக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 6) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முதல்வர், கல்வியும், மருத்துவமும் திராவிட ஆட்சியின் இரு கண்கள். உலக அமைப்பே பாராட்டும் வகையில் மக்களை நோக்கி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
மாநில வளர்ச்சி ஒருவருக்கு தெரியவில்லை, மக்களை குழப்பும் வகையில் பேசிவருகிறார்.
சுகாதாரத்தில் தேசிய அளவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...