"நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா" சுவரொட்டி: கோவையில் பரபரப்பு

"நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா" சுவரொட்டி: கோவையில் பரபரப்பு

கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றத்தினர் "நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா" என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Published on

கோவை: கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றத்தினர் "நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா" என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சுவரொட்டிகள் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் அந்த ரசிகர் மன்றத்தினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் சமீபகாலமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பு, அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் நினைவு நாள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் நாளை விஜய் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாவட்ட தலைமை மாணவரணி சார்பில் மாநகர் முழுவதும், "நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா" என்ற வாசகங்களுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com