தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியில் ரயில்வே அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தமிழக அணி முன்னேறியுள்ளது.
27-ஆவது சீனியர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. லீக் போட்டியில் தகுதி பெற்ற தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
முதல் அரையிறுதிப் போட்டியில் ரயில்வே அணியுடன் தமிழக அணி இன்று காலை மோதியது.
இந்நிலையில், 3-1 என்ற கோல் கணக்கில் ரயில்வே அணியை வீழ்த்திய தமிழக அணி 5 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஹரியாணா மற்றும் ஒடிஸா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் தமிழக அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.