தமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!‘கோட் சூட் அணிந்த விவசாயி’... விஜய்யை புகழ்ந்த அமைச்சருக்கு திமுகவினர் எதிர்ப்பு!பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம்: ரூ. 648 கோடி ஒதுக்கீடு!கருப்பு சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏக்கள் வருகை!மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு ஒத்து வராது: கே.எஸ். அழகிரி பேட்டி

பிரதமர் நரேந்திர மோடி கூறி வரும் பொது சிவில் சட்டம் நம் நாட்டுக்கு ஒத்து வராது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:44 am IST


கும்பகோணம்: பிரதமர் நரேந்திர மோடி கூறி வரும் பொது சிவில் சட்டம் நம் நாட்டுக்கு ஒத்து வராது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

கும்பகோணத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் ஒத்து வராது. மாறாக பிரச்னைகளைதான் உருவாக்கும். பொது சிவில் சட்டம் ஒரே மதம், இனம், மொழி உள்ள நாட்டுக்குத்தான் பொருந்தும். 

இந்தியாவில் பல்வேறு மதங்கள் உள்ளன. இந்து மதம் ஒரே நாகரிகம், கலாசாரம் கொண்ட மதம் அல்ல. இந்து மதத்தில் வைணவம், சைவம் இருக்கின்றன. வைணவமும், சைவமும் வெவ்வேறு கலாசாரம், இறை வழிபாடு, பழக்க வழக்கங்களும் கொண்ட அமைப்பு. வைணவத்திலும் தென்கலை, வடகலை என உள்ளன. இதுதான் இந்தியாவின் சிறப்பு. இவ்வளவு மாறுபட்ட மனிதர்கள் ஒரே நாடாக வாழ்கின்றனர் என்பதால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என மகாத்மா காந்தி கூறினார். 

இந்த தேசத்தில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதாக பிரதமர் மோடி கூறி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இதை எடுத்துக் கூறினால் நாட்டில் உள்ள மக்கள் சண்டையிட்டு பிரிந்து போவர். அதைக் கொண்டு வெற்றி பெற்று விடலாம் பாஜக நினைக்கிறது.

மணிப்பூரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் உள்ளனர். மலைவாழ் மக்கள் கிறிஸ்துவ மதத்தையும், நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இந்து மதத்தையும் பின்பற்றுகின்றனர். இரு தரப்புக்கும் இடையே பிரச்னைகளை உருவாக்கியதால் 6 மாதங்களாக அந்த மாநிலம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி நினைத்திருந்தால் 24 மணிநேரத்தில் கலவரத்தை அடக்கி இருக்க முடியும்.

ஒரே மொழி, நாடு, கலாசாரம் எனக் கூறும் பிரதமர் மோடி, ஒரே ஜாதி இந்தியாவில் இருக்கட்டும் என சொல்வாரா?. மக்களை மத ரீதியாக பிரித்தாள்வதுதான் தேர்தல் வெற்றிக்கு பயன்படும் என பாஜக கருதுகிறது. அவர்களின் கொள்கையே பிரித்தாள்வதுதான். இது அவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இதை எதிர்க்கின்றனர். 

ஒரு பதவி என்பது மாற்றத்துக்கு உட்பட்டதுதான். ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நான் இருந்து வருகிறேன். எவ்வளவு நாள்தான் ஒருவர் தலைவராக இருக்க முடியும். ஆனால் இம்முறை நான் தில்லி சென்றதற்கும், தலைவர் பதவி விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்று அழகிரி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.