தமிழ்நாட்டில் சளி, இருமலுடன் வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்து மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவில் ஏ எச்3என்2 வகைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏ எச்3என்2 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூச்சுத் திணறல், நிமோனியா போன்றவை தாக்கக் கூடும். பலருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய தேவை ஏற்படக்கூடும். மொத்தத்தில் இப்போது ஏற்பட்டுள்ள சூழலை மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் எதிர்கொள்ள வேண்டும்.
கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டத்தை தவிர்த்தல், மூக்கு மற்றும் கண்களை தொடாமல் இருத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களிடம் செல்லாமல் தாமாக ஆண்டி பயாடிக் மருந்துகளை எடுக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் நூறைத் தாண்டியுள்ளது. இது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தொடக்க நலவாழ்வு மையங்கள் வாயிலாக மருத்துவ பாசறைகளை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


