தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் விலகல்! அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன் கட்சியில் இருந்தும் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர் திலீப் கண்ணன். இவர் பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் பலர் கட்சியில் இருந்து விலகுவார்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து திலீப் கண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில், 'கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்..
இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..??
தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை..
பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்.. இறைவனுக்கே வெளிச்சம்
ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார்.
சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பாப்பது, ஊர் உலகமே கேவலமாக பேசும் ரொட்டியை கூடவே வச்சு சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை போல..' என்று பதிவிட்டு அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதையும் படிக்க | பாஜக ஐடி பிரிவு தலைவா் அதிமுகவில் இணைந்தாா்
முன்னதாக, பாஜக தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் சி.டி.ஆா். நிா்மல் குமாா், அந்தக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.