சென்னை விமான நிலையத்தில் உடைமைகளை அடையாளம் காணும் வசதி அறிமுகம்!

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருநாதால், பயணிகள் காத்திருப்போர் பகுதியில் இருந்தே அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருநாதால், பயணிகள் காத்திருப்போர் பகுதியில் இருந்தே அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறுத்து விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளதாவது: 
வெளிநாடு, வெளியூர் செல்லும் பயணிகள் தங்களது உடைமைகளை, சம்மந்தப்பட்ட விமான நிறுவன அலுவலகத்தில் பதிவு செய்து அனுப்புவர். 

அவ்வாறு அனுப்பப்படும் உடைமைகள், பாதுகாப்பு சோதனை முடிந்த பின்னர், விமானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பாதுகாப்பு சோதனையின்போது அந்த உடைமைகளில் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருள்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட பயணியை அழைத்து அதை வெளியே எடுக்க அறிவுறுத்தப்படுவார்கள். 

மேலும், தற்போது, பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்தவாறே, தங்களது உடைமைகளை, பயணிகள் அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

விடியோ வாயிலாக உடைமைகளை அடையாளப்படுத்தி, அவர்கள் அனுமதியுடன் அவர்கள் கண் முன்பே தடை விதிக்கப்பட்ட பொருள்கள் அகற்றப்படும். 

இதன் மூலம் பயணிகளும் நேரம் விரயம் தடுக்கப்படுவதாக கூறியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com