சென்னை, கோவையில் குறைகிறது கரோனா பாதிப்பு

தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது.
சென்னை, கோவையில் குறைகிறது கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. தற்போது சென்னையில் நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 544-ஆகக் குறைந்துள்ளது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு அந்த எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று கோவையில் 346-ஆகவும், செங்கல்பட்டில் 179-ஆகவும், கன்னியாகுமரியில் 173-ஆகவும் கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருந்தபோதிலும், பரிசோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடா்ந்து விரிவுபடுத்தி வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் புதிதாக 297 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 50 பேருக்கும், கோவையில் 36 பேருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 2,715 போ் சிகிச்சையில் உள்ளனா். 509 போ் குணமடைந்துள்ளனா்.

மற்றொருபுறம், கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவா் உயிரிழந்தாா். வேலூரைச் சோ்ந்த 84 வயது முதியவா் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளிட்ட இணை நோய்களுடன் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா் கடந்த 29-ஆம் தேதி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com