
கோப்புப் படம்
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. எனினும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தமிழகத்தின் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.