அடுத்தடுத்து 5 மாநாடுகளை நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்க டிடிவி தினகரனை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லையில் மாநாடுகளை நடத்த ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இபிஎஸ்-க்கு எதிராக வழக்குகளை தொடர்ந்துள்ள ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்களை அணி திரட்ட களமிறங்கியுள்ளார். மாநாடுகளை பங்கேற்க தினகரனுக்கு அழைப்பு விடுக்கும் ஓபிஎஸ், சசிகலாவையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்துக்கு இரவு 7 மணியளவில் நேரில் சென்ற ஓபிஎஸ்ஸை டிடிவி தினகரன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
டிடிவி தினகரனுக்கு பூங்கொடுத்து கொடுத்து தனது மகிழ்ச்சியை ஓபிஎஸ் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் கலந்துரையாடினர். ஓபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.