
கோப்புப்படம்
பிளஸ் 2 தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் 13,141 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில் 11,935 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.82.
தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை - 6, 429
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 5,561
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் - 86.50
தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை - 6,712
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 6,374
தேர்ச்சி விகிதம் 94.96
அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 48 பள்ளிகள் உள்ளன. 6,847 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 5,920 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 86.46.