
சென்னை: தமிழகத்தில் வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'டி' சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட பசும்பால் ஆவின் நிா்வாகம் இன்று முதல் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது ஆவின் நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள கிராம புறங்களில் இருந்து, கிராமப்புற கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி விற்பனைக்கு செய்து வருகிறது. தினமும் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வரும் நிலையில், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 3 லட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்த செறிவூட்டப்பட்ட பசும்பாலில் கொழுப்பு சத்து 3.5 சதவீதம் என்ற அளவில் நிறைந்து இருக்கும். அரைலிட்டர் ரூ.22க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. முன்னதாக கடந்த சட்டசபை கூட்டதொடரில் வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'டி' செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் ஆவினில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...