ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வருகிற மே 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் செல்லவிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

வருகிற மே 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் செல்லவிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. 

இதையடுத்து திருவள்ளூர் பெருவயல் கிராமத்தில் 52.4 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மிட்சுபிஷி நிறுவனத்தின் ஏர் கண்டிஷனர் மற்றும் கம்ப்ரசர் தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகிற மே 23 ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் செல்லவிருப்பதாக முன்னணி தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், 'இந்திய அளவில் 2-வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை மாற்றப்பட்டுள்ளது. அதிக அளவில் தொழில்துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஜப்பான் - தமிழ்நாடு உறவை மேலும் வலுப்படுத்த இந்த பயணம் மேற்கொள்கிறேன்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com