சிஆர்பிஎஃப் ஆள் சேர்ப்பு: தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளில் எழுத்துத் தேர்வை நடத்த வைகோ வலியுறுத்தல்

அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும்
சிஆர்பிஎஃப் ஆள் சேர்ப்பு: தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளில் எழுத்துத் தேர்வை நடத்த வைகோ வலியுறுத்தல்


சென்னை: அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சி.ஆர்.பி.எஃப் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பணியிடங்களைத் தேர்வு செய்ய மே எட்டாம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் ஜூலை மாதம் இணைய வழி எழுத்து தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

சி.ஆர்.பி.எஃப் எனப்படும் துணை ராணுவப் படையில் ஆள்களை சேர்க்க நடைபெறும் எழுத்து தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும்தான் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. 

அனைத்து மாநிலங்களிலிருந்தும் துணை ராணுவப் படையில் வீரர்கள் சேரும் வகையில், தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் எழுத்துத் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com