பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதிதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

அமைச்சரான மகன் டிஆர்பி ராஜா! என்ன சொல்கிறார் டி.ஆர். பாலு?

தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது மகன் டிஆர்பி ராஜா சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

Published On :2 பிப்ரவரி 2024, 12:25 am IST

தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது மகன் டிஆர்பி ராஜா சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தொழில்துறை அமைச்சராக மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா பொறுப்பேற்றார். இவர் திமுக எம்.பி.யும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகன் ஆவார். 

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, 'டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். டிஆர்பி ராஜா மிச்சிறப்பாக பணியாற்றி முதல்வரின் நன்மதிப்பைப் பெற வேண்டும். முதல்வர் ஸ்டாலினின் அறிவுரைப்படி சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய மிக முக்கியமான வேண்டுகோள். அனைவரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவை புரிய வேண்டும்' என்று கூறினார். 

பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலருக்கு இதில் அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறது என செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த டி.ஆர்.பாலு, 'அவர் என்னுடைய நண்பர். எங்களுடைய மாவட்டச் செயலாளர். டிஆர்பி ராஜா அமைச்சராக அவரும் முக்கியமான காரணம்' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.