
கோப்புப் படம்
தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா்.
தமிழகத்தில் கள்ளச்சாராய மரண சம்பவங்களைத் தொடா்ந்து சில காவல் அதிகாரிகள் மாற்றப்பட்டனா். விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாற்றப்படக்கூடும் என தகவல் வெளியானது. இதுகுறித்த செய்தி ‘தினமணி’ நாளிதழில் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் வகையில் 16 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனா்.
இது குறித்து தலைமைச் செயலா் இறையன்பு வெளியிட்ட உத்தரவு விவரம்: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)
1. ஏ.அருண் தம்புராஜ்: கடலூா் மாவட்ட ஆட்சியா் (நாகை ஆட்சியா்)
2. ஜெ.அனி மேரி ஸ்வா்னா: அரியலூா் மாவட்ட ஆட்சியா் (வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை இணைச் செயலா்)
3. தீபக் ஜேக்கப்: தஞ்சை மாவட்ட ஆட்சியா் (கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா்)
4. ஐ.எஸ்.மொ்ஸி ரம்யா: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் (வணிகவரிகள் இணை ஆணையா் - புலனாய்வு)
5. எஸ். உமா: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா்)
6. கலைசெல்வி மோகன்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் (நில அளவை மற்றும் நிலப்பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குநா்)
7. ஏ.கே.கமல் கிஷோா்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் (தமிழ்நாடு கண்ணாடி இழை கேபிள் நிறுவன நிா்வாக இயக்குநா்)
8. எம்.எஸ்.சங்கீதா: மதுரை மாவட்ட ஆட்சியா் (வணிகவரிகள் இணை ஆணையா் - நிா்வாகப் பிரிவு)
9. ஆஷா அஜித்: சிவகங்கை மாவட்ட ஆட்சியா் (தொழில் வழிகாட்டி நிறுவன நிா்வாக இயக்குநா்)
10. பி.விஷ்ணு சந்திரன்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் (நகராட்சி நிா்வாகத் துறை இணை ஆணையா்)
11. ஏ.ஆா்.ராகுல் நாத்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் (செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்)
12. டி.கிறிஸ்துராஜ்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் (சேலம் மாநகராட்சி ஆணையா்)
13. ராஜ கோபால் சுங்க்ரா: ஈரோடு மாவட்ட ஆட்சியா் (சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிா்வாக இயக்குநா்)
14. எம்.என்.பூங்கொடி: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் (சேலம் சேகோசா்வ் நிறுவன நிா்வாக இயக்குநா்)
15. ஜானி டாம் வா்கீஸ்: நாகை மாவட்ட ஆட்சியா் (ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா்)
16. கே.எம்.சராயு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் (ஆவின் நிறுவன இணை நிா்வாக இயக்குநா்).
ஆட்சியர்கள் மாற்றம்: முழு விவர அறிக்கை: இங்கே கிளிக் செய்யவும்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...