சென்னையை வாட்டும் வெயில்; என்னென்ன செய்யலாம்? மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னையில் நாளுக்குநாள் வெயில் அதிகரித்துவருவதால், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 
சென்னையை வாட்டும் வெயில்; என்னென்ன செய்யலாம்? மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னையில் நாளுக்குநாள் வெயில் அதிகரித்துவருவதால், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

கோடை வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையிலும், வெளியே வரும்போது செய்ய வேண்டிய சில செயல்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது. 

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாநகரில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் நமது அல்லது நம் அன்பானவர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில், சில செயல்களை நாம் பழக்கமாக்கொள்ள வேண்டும். 

அதிகப்படியான வெயிலிலிருந்து காத்துக்கொள்ளும் வகையில், அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை வறண்டுபோகச் செய்யக்கூடாது.

பருவ கால காய்கறி / பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். 

மிகவும் செளகரியமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். 

வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும். 

வீட்டில் காற்றோட்டமான இடங்களில் அதிக நேரம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 

இளநீர், பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும். 

சோம்பலாகவோ, சோர்வாகவோ இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com