
கோப்புப்படம்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் நாகை மாவட்டத்தில் 83.54 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம், புதுவையைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் 9.20 லட்சம் எழுதினர்.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகின. இதில், தமிழ்நாடு முழுவதும் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் நாகை மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 83.54 என பதிவாகியுள்ளது.
தேர்வெழுதிய 8,168 பேர்களில், 6,895 தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 3,316, மாணவியர்கள் 3,579 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...