

தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை விதிமுறைக்குப் பின்னர் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தாண்டு கோடை வெயில் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.