அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலை. அறிவிப்பு: பொன்முடி விளக்கம்

தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் தமிழ்வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலை. அறிவிப்பு: பொன்முடி விளக்கம்

தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் தமிழ்வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

2023-2024 கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சில தமிழ், ஆங்கில வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

பின்னர் இதுகுறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. 

நடப்பு கல்வியாண்டில் மட்டும் அனைத்து உறுப்புக் கல்லூரிகளில் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறும் என்றும் இதனை நிறுத்திவைப்பது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்வோம் என்றும்  அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல் ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது. திராவிட மாடல் அரசு தாய்மொழிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும். 

மேலும் பல பாடப்பிரிவுகளை தமிழ்வழியில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் புதிய பாடங்கள் தொடங்கப்பட்டால் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். 

இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடாமல் இருக்கவே துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறோம். இதுதொடர்பான மசோதா ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com