எட்டு வாரங்களுக்கும் மேல் எட்டாக்கனியாக இருக்கும் இஞ்சி! இதுவா காரணம்?

விலை குறைவாகவே இருப்பதால், விவசாயிகள் இஞ்சி விளைச்சலைக் குறைத்துக் கொண்டதன் எதிரொலியாக, தற்போது வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் இஞ்சி கிலோ ரூ.240 வரை விற்கப்படுகிறது.
எட்டு வாரங்களுக்கும் மேல் எட்டாக்கனியாக இருக்கும் இஞ்சி! இதுவா காரணம்?
Published on
Updated on
1 min read

விலை குறைவாகவே இருப்பதால், விவசாயிகள் இஞ்சி விளைச்சலைக் குறைத்துக் கொண்டதன் எதிரொலியாக, தற்போது வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் இஞ்சி கிலோ ரூ.240 வரை விற்கப்படுகிறது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேல் இஞ்சி விலை ரூ.200 என்ற அளவில் நீடிப்பதால், சில்லறை விற்பனை கடைகளிலும் நல்ல தரமான புதிய இஞ்சிகளை வாங்கி வந்து விற்பனை செய்வது குறைந்துவிட்டது.

வெறும் ரூ.5 அல்லது ரூ.10க்கு இஞ்சி கேட்கும் பொதுமக்களிடம் ஒரு சின்னத் துண்டு இஞ்சியைக் கொடுத்தால் நம்மை மேலும் கீழும் பார்ப்பார்கள் என்று அஞ்சியே பல சில்லறை விற்பனைக் கடைகளில் இருக்கும் பழைய இஞ்சியை விற்பனை செய்வது அல்லது இல்லை என்று சொல்லிவிடுவது சாலச்சிறந்தது என்று முடிவெடுத்துவிட்டார்கள்.

தேநீர் கடைகளிலும் இஞ்சி டீ என்று கேட்டால், நாவில் எந்த தடயத்தையும் ஏற்படுத்தாத டீதான் கிடைக்கிறது. காரணம் இந்த விலைஉயர்வுதான்.

கோயம்பேடு சந்தைக்கு கா்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவு இஞ்சி விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை இஞ்சி வரத்து மேலும் குறைந்ததால் அதன் விலை புதிய உச்சம் தொட்டிருந்தது. இதன்படி ஒரு கிலோ இஞ்சி மொத்த விற்பனை கடைகளில் ரூ.200-க்கு மேல் விற்கப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து இஞ்சி வியாபாரி ஒருவா் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி சாகுபடியை நிறுத்திவிட்டனா். இதனால் தான் இஞ்சி வரத்து குறைந்தது. இந்த விலை உயா்வு மேலும் சில நாள்கள் வரை நீடிக்கும் என்றாா் அவா்.

இதுகுறித்து கோயம்பேடு வியாபாரிகள் சிலா் கூறியாதவது:

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உதகை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், கா்நாடக மாநிலம் மைசூரு, ஹசன், கேரளத்தின் தேக்கடி, ஆலப்புழா ஆகிய இடங்களில் அதிக அளவில் இஞ்சி பயிரிடப்படுகிறது. மாா்ச் இரண்டாம் வாரத்தில் இஞ்சி அறுவடை காலம் முடிந்து விடும். ஏப்ரல் முழுவதும் இஞ்சியின் நடவு காலம் என்பதால் அதன் வரத்து     
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com