சிங்கப்பூர்-ஜப்பான் பயண அனுபவங்களைப் பகிர்ந்த மு.க. ஸ்டாலின்!

சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு மேற்கொண்ட பயண அனுபவங்களை சிறு டைரி குறிப்பாக பொதுமக்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
சிங்கப்பூர்-ஜப்பான் பயண அனுபவங்களைப் பகிர்ந்த மு.க. ஸ்டாலின்!

சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு மேற்கொண்ட பயண அனுபவங்களை சிறு டைரி குறிப்பாக பொதுமக்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன்.

என் பயண அனுபவங்களைச் சிறு டைரி குறிப்பு போல் உங்களுடன் பகிர்கிறேன் எனப் பதிவிட்டு, பயண அனுபவங்களை குறிப்புகளாகப் பகிர்ந்துள்ளார். 

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மே 23 செவ்வாய்: 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சிங்கப்பூர் - ஜப்பான் நாட்டின் நிறுவனங்களை அழைப்பதுதான் பயணத்தின் முதன்மை நோக்கம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தேன்.

மே 24 புதன்: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த 3 பெரிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களைத் தனித்தனியாக சந்தித்தேன். 

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

மே 25 வியாழன்: சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று தமிழர்களுடன் தேநீர் அருந்தியும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தேன். 

மே 26 வெள்ளி: ஒசாகாவில் டைடல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். 

ஒசாகா முதலீட்டாளர்களுடன் கருத்தரங்கம் நடைபெற்றது.

கோமாட்சு பிரமாண்ட தொழிற்சாலைக்குச் சென்றேன். 

மே 27 சனிக்கிழமை: ஒசாகா கோட்டையை சுற்றிப்பார்த்தோம். 

தி இந்தியன் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்பாட்டு விழாவில் பங்கேற்றோம். 

மே 28 ஞாயிறு: ஒசாகாவிலிருந்து டோக்கியோவிற்கு இரண்டரை மணிநேரத்தில் 500 கி.மீ. புல்லட் ரயில் பயணம் மேற்கொண்டேன். 

மே 29 திங்கள்: ஜப்பான் தொழில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நேரடி சந்திப்பு நடைபெற்றது. 

மே 30 செவ்வாய்: என்இசி எதிர்கால தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் முன்னணி நிறுவனங்களைப் பார்வையிடச் சென்றிருந்தேன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com