அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசுப் பள்ளிகளில் அந்தத் தேர்வுக்கான பயிற்சிகள் தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
அரசுப்பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

தஞ்சாவூர்: நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசுப் பள்ளிகளில் அந்தத் தேர்வுக்கான பயிற்சிகள் தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூர் காந்திஜி சாலையில் தனியார் துணிக்கடையை வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தாலும் அதுவரை பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் சிறப்புப் பயிற்சி நடைபெறும்.  ஏனென்றால் அரசுப் பள்ளி மாணவர்களால் வெளியே தனியாரிடம் ரூ. 2 லட்சம், ரூ. 3 லட்சம் செலுத்தி பயிற்சி பெற முடியாது. மாணவர்களின் நிதி சுமையைக் குறைப்பதற்காக பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பள்ளிகளில் மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தவறு இல்லை என நீதிமன்றமே கூறியுள்ளது. அரசு தங்களது கருத்துகளை இதுபோன்று வெளிப்படுத்துவதில் தவறில்லை எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com