காஸாவை சுற்றிவளைத்த இஸ்ரேல் ராணுவம்!

காஸாவுக்குள் படிப்படியாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது காஸாவை சுற்றிவளைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 
காஸாவில் இஸ்ரேல் ராணுவம்
காஸாவில் இஸ்ரேல் ராணுவம்

காஸாவுக்குள் படிப்படியாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம் தற்போது காஸாவை சுற்றிவளைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக். 7 ஆம் தேதி தொடங்கிய போர் இன்று 28 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலில் தாக்குதலை மேற்கொண்ட ஹமாஸ் படையினருக்கு பதிலடியாக காஸாவை முற்றிலும் அளிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் தீவிரமான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. 

இந்த போரில் பாலஸ்தீனியர்கள் தரப்பில் உயிரிழப்பு 9,061 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,760 பேர் குழந்தைகள், 2,326 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் காஸா நகரம் முழுவதையும் சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதனால் இஸ்ரேல் தாக்குதலின் தீவிரம் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

இஸ்ரேல் தரப்பில் இதுவரை 335 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று காஸாவின் அல்-குவாத் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஜெனின் அகதிகள் முகாமிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com