மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து 2702 கன அடியாக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேட்டூர் அணை நீர்வரத்து 2702 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம்  53.80 அடியாக உயர்ந்துள்ளது.
 
மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2238 கன அடியிலிருந்து வினாடிக்கு 2702 கன அடியாக  சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 20.28 டிஎம்சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com