பட்டியலின மாணவா் தற்கொலை: தந்தைக்கு ரூ. 6 லட்சம் தீருதவித் தொகை வழங்கல்

பிற சமூக மாணவா்கள் கிண்டல் செய்ததில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தைக்கு, தேசிய பட்டியலின ஆணையர் தீருதவித் தொகையாக ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை செவ்வாய்க்கிழமை இரவு வழங்கினார்.
பட்டியலின மாணவா் தற்கொலை: தந்தைக்கு ரூ. 6 லட்சம் தீருதவித் தொகை வழங்கல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பட்டியலினத்தைச் சோ்ந்த விஷ்ணுகுமாரை அதே ஊரைச் சோ்ந்த பிற சமூக மாணவா்கள் கிண்டல் செய்ததில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தைக்கு, தேசிய பட்டியலின ஆணையர் தீருதவித் தொகையாக ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை செவ்வாய்க்கிழமை இரவு வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள கொப்பம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த வீரமுத்து மகன் விஷ்ணுகுமாா். கீரனூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

பட்டியலினத்தைச் சோ்ந்த விஷ்ணுகுமாரை அதே ஊரைச் சோ்ந்த பிற சமூக மாணவா்கள் கிண்டல் செய்வதும், வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் நடந்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பகலில் மாணவா் விஷ்ணுகுமாா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூறாய்வுக்கு பிறகு சனிக்கிழமை இரவு மாணவரின் உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

புலன் விசாரணையில் சாதிய ரீதியான தற்கொலைக்குத் தூண்டுதல் காரணம் கண்டறியப்பட்டவுடன், எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு உள்ளிட்ட குற்றப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வோம் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் தேசிய பட்டியலின ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் செவ்வாய்க்கிழமை இரவு புதுக்கோட்டை வந்தார். வழக்கு விசாரணை போக்குகள் குறித்து ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இறந்த மாணவன் விஷ்ணுகுமாரின் தந்தை வீரமுத்துவுக்கு தீருதவித் தொகையாக ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை, இயக்குநர் ரவிவர்மன் நேரில் சென்று வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com